பாரத தேவி புறப்பட்டாள்

புறப்பட்டாள் பாரத தேவி!
மெல்லிய கொலுசு ஒலியில்
உள்ளம்நிறை உவகையுடன்
எழில்சூழ் இமாலயம் சென்றாள்!
வேட்டு சத்தம் போட்டிப்போட
எட்டிப் போட்டாள் நடையை….

சட்டஉரிமை மக்களுக்கு
பயனா? என கண்டறிய
பாராளுமன்றம் சென்றாள்
பற்பல ஆயுதங்களுடன்
பாதுகாப்பு அதிகாரிகளின்
கெடுபிடிகளான கேள்விகளால்….
பயந்தே பின்வாங்கினாள்!

பயணமானாள் பரபரப்பான நகரத்திற்கு
பரபரப்பில் அவளை இடித்தே தள்ளிவிட்டு
பணத்திற்கு ஆலாய் பறந்ததைப் பார்த்து
பதறி போனாள் !

மாறுவேடத்தில் சென்றாள்
சட்டமன்றம்
பறந்தன செருப்புகளுளம்….
காதேகூசும் வார்த்தைகளும்
முக்காடிட்டு மறைந்தாள்!

ஊருக்கு ஒதுக்குப்புறம்
ஒதுங்கினாள்
ஆங்கே மட்டரக மதுவாசமும்
இச்சைப் பேச்சு மொழியும்
புரியாதவளாய் நிற்கையில்…

கழிவிரக்கமின்ற காமப்பசிக்கு
ஆளாக்கி ஓரம் போட்டுவிட்ட
ஒருத்திக்கு….பட்டுப்புடவையை தாரைவார்த்துவிட்டு
எவரும் அறியாவண்ணம் மறைந்தாள்!
பொத்தல் பொத்தலான புடவையுடன் !

நன்றி- பிஞ்சுவிரலின்
பிகாசோ ஓவியம் ---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (24-Jan-16, 12:28 pm)
பார்வை : 90

மேலே