குடி அரசு
பொன்னும்,பொருளும் விளைந்த நம் நாட்டை
வெள்ளை கூட்டமொன்று கொள்ளை அடிக்க வந்தது.
அந்நியனின் ஆட்சியிலே அகப்பட்டது புண்ணியமிக்க நம்பூமி.
அடிமைபட்ட இந்தியாவின் அவலங்களை நீக்கிட கடமைஎன பலர் சேர்ந்து காத்திட விரைந்தனர்.
சிறையிலே அடிபட்டு வலி கொண்டபோதெல்லாம் கரைகாணும் நாள்எண்ணி கனவுடன் மகிழ்ந்தனர்.
பஞ்சம் பிழைக்கவந்த வஞ்சகனை விரட்டிட
அஞ்சாமல் போராடி பலர் உயிரை இழந்தனர்.
பொருக்கமுடியாமல் பொங்கி எழுந்திட
இருக்கமுடியால் வெளியேற நினைத்தான்
வெளிநாட்டுகாரன்.
ஒன்றுபட்ட பாரதத்தின் பகையை எதிர்த்திட
பலமில்லா போனதால் மூட்டைகளை கட்டிக்கொண்டு நாட்டைவிட்டு ஓடினான்.
வறுமையின் பிடியிலே வளம் இழந்த இந்தியா.
எழுத்தறிவு இன்றியே மக்கள் ஆட்டுச்சந்தையா.
தலைவர்கள் பலர் சேர்ந்து தலையாய கடமை என
சட்டங்கள் போட்டு திட்டங்கள் தீட்டினர்.
இன்றுபல முன்னேற்றம் கண்டுள்ளது நம்நாடு.
ஆனாலும் களைபயிராய் ஆங்காங்கே பல கேடு.
வளமான இந்தியாவை பலமாக மாற்றிட ஒன்றாக கூடுவோம்.
வன்முறை இல்லாத அமைதியான நாட்டிலே ஆனந்த கூத்தாடுவோம்.