அவள் அழகைப் பாடிட

கடலணையும் அலையோடு கால் கழுவிப் போகையில்...நுரையென படர்கிறாய்...
விடியலில் வழிகிற பனி மலர் உடலென...
முழுவதும் சிலிர்க்கிறாய்....


தேம்படு பூவை தழுவும் வண்டாய்...
கரு நிற கார் குழல் விழிகளின் சேர் நிறம்
கடை விழிப் பார்வையில்...காட்டும்
ஜாடையில் உயிர் முடி ஆழ்கிறாய்...


பொடி நடை போடையில் தவழும் அன்னமாய்..
கொடியிடை அசைகையில் மாதுளை கிண்ணமாய்...
நடக்கையில் நைல் நதி...
இவள்படைத்தவன் செய்த சதி..

வீழ்த்தும் பார்வை வேல் விழி அம்பாய்...
வில்லென புருவம் சொல்லவே நெருடுது...
தெள்ளிய நாணம் தேறிய மென்மை...
பள்ளினியோசை பார்க்கவே ஆசை...

செந்தமிழ் சேர் குரல் ..செந்தழல் போல் இதழ்....
நிலவில் மூழ்கி உயிரில் முத்தெடுக்கிறாள்...
நிலாவோடு உலாவரும் தேவதை... இவள்
விழாவோடு மிளிர்கிற தாரகை...

தனிமை மயக்கி துணையாய் அமரும்
கயல்..இனிமை சமைத்து வெறுமை போக்கும் அனல்.. பதுமை ஜாதி இவள்...
ரதி தேவியின் வாசமாய் நிழல்...

அருகிய வார்த்தைகள் சேர்த்து...
அவள் அழகின் மேன்மை கோர்த்து...
விரிகிற இரு விழி ஈர்த்து ...பருகிகிடும் நாளது பார்த்து....அரும்புது ஆவல் பூத்து..

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (26-Jan-16, 8:58 am)
பார்வை : 636

மேலே