நெஞ்சிலிருத்தி சபதமேற்போம்
கம்பத்திலேறிய
கொடிதனை பாரினில்
கம்பன் கவிகள் போல்
உயரச்செய்வோம்...!
வல்லரசாதலென்பது
வாயினில் மட்டும்
வாசம் செய்தலாகாது!
நன்னெறிகளை
வாழ்வினிலிறுத்தி
நல்லரசமைக்க
முயற்சிப்போம்...!
தலையாய வழிதனில்
தாய்நாட்டை செலுத்தி
தலைவிதியென்பதை
தலைச்சுற்றியெறிந்து
அரும்பாடுபட்டு
நாம் பெறாவிட்டாலும்
ஆன்றோர் தந்த
சுதந்திரம்தமை
தக்கவைத்து
தக்கையாகிப் பறக்கும்
மனிதநேயத்தை,கலாச்சார
த்தை மீண்டும்
நிலைப்பித்து...
நல்லதொரு குடியாய்
பாரினில் நம்நாடு திகழ
குடியரசு தினமென்று
கூறி மகிழ்ந்திடும்
இந்நாளில்
நற்பொன்னாளில்
நாமனைவரும்
நெஞ்சிலிருத்தி
சபதமேற்போம்!!!
********************