பெண் மகவு

இறையானவள் இனிதானவள்
நிறைவானவள் அவள்தான்மகள்
நலமாயவள் வளராவிடில்
பலமேயிலை மனிதாவுணர்!
மகிழ்வாயவள் மனம்வாழ்த்திட
சுகமாகுமே உணர்வாயிதை!
கருவினிலவள் திருவழிக்கிறாய்
தருமமிதுவோ தவறிழைக்கிறாய்
அறிந்திடவொரு பொழுதுவந்திடும்
அறிகையில்மனம் பதறிடும்அறி!

அதனால்

தாயென வாகிய தளிரிளம் பெண்மகள்
தீயென வானவுன் தீமையில் கருகிடா
நன்னிலை வந்திட வேண்டும்!
உன்தீ நெஞ்சினை எரித்தி(டு) இக்கணம்!

(வஞ்சிப்பா)

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.01.25

எழுதியவர் : ஞா.நிறோஷ் (26-Jan-16, 11:54 am)
பார்வை : 186

மேலே