ஆசிய ஜோதி

ஆசிய ஜோதியாம் எங்கள் நேரு
அயராதுழைத்தவர் எங்கள் நேரு
அறிவுச் சுடராம் எங்கள் நேரு
அன்பின் ஒளியாம் எங்கள் நேரு

எழிலான நாடாம் பாரதத்தில்
எமது நேரு வாழ்ந்தவராம்
அழகியப் பூவாம் ரோஜாபோல்
மழலைகள் நெஞ்சில் மலர்ந்தவராம்

மாமா என்று நாங்களெல்லாம்
அழைக்கும் பாக்கியம் அளித்தவராம்
குழந்தைகள் தினமாய் கொண்டாட
நேரு பிறந்தநாள் வந்ததுவாம்

பஞ்ச சீலக் கொள்கைகளை
பாண்டுங் மாநாட்டில் வெளியிட்டாராம்
கிராம ராஜ்யம் அமைந்திடவே
கற்பனை மிகவும் கொண்டாரம்

நாட்டின் ஒற்றுமை காத்திடவே
சமாதானப் புறாவாய் இருந்தாராம்
பாரதப் பிரதமராய் வீற்றிருந்து
பணிகளை செவ்வனே செய்தாராம்

வானத்தை விட்டுப் பிரியாத
நிலவை போலிங்கு வாழ்ந்தவர்
மக்களைத் துயரக் கடலில் ஆழத்தி
மறைந்தாலும் என்றும் குழந்தைகள்
மனதில் வாழந்திடுவார்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (26-Jan-16, 3:13 pm)
Tanglish : aasia jothi
பார்வை : 510

மேலே