ஒரு பெண்ணைப் பார்த்தேன்

ஒரு பெண்ணைப் பார்த்தேன்
பேச்சில் ஒரு நயமில்லை
பார்வையில் ஒரு கனிவில்லை
நடையில் ஒரு நளினமில்லை
திமிர் தலை தூக்கி நிற்க
அடம் நிலை கொள்ள மறுக்க
புறத் தோற்றத்திலும் கண்டேன்
சற்று எதிர் மறையாக
தாட்டியும் உயரமும்
சற்றுக் கூடுதலாக
என்னால் கேட்காமல்
இருக்க முடியவில்லை
மெதுவாகக் கேட்டேன்
உன் பெயர் என்னம்மா?
என்று அதிகாரக் குரலிலே
சொன்னாள் அழகு என்று.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (26-Jan-16, 8:26 am)
பார்வை : 742

மேலே