பார்வை

உன்னை
அழகியாகப் பார்த்தேன்
ரதியாகத் தெரிந்தாய்
ஆசையோடு பார்த்தேன்
மாதவியாகத் தெரிந்தாய்
அன்போடு பார்த்தேன்
அன்னையாகத் தெரிந்தாய்
கனிவோடு பார்த்தேன்
குழந்தையாகத் தெரிந்தாய்
உன்னுள் எப்படி
இத்தனை போ்கள்?

எழுதியவர் : சொ.பாஸ்கரன் (26-Jan-16, 5:20 am)
பார்வை : 63

மேலே