என் குழந்தை

கண்கள் துருதுருக்க....
செவ்வாய் பூத்திருக்க....
முன்னங் கைகள் தரையில் அழுத்தி
பின்னங் கால்களை உந்தி தள்ளி
தவழ்ந்து அசைந்து வரும்
மழலைச் செல்வமே.....
என் அருணாச்சலா.....!

பூமேனி கசசங்காமல்
நின்னை அள்ளி
அரவணைத்து
நினது பட்டுக் கன்னத்தில்
முத்தமிட்டு
கொஞ்சி விளையாடும் போது
நீ சிந்தும் புன்னகையில்
முத்தல்லவோ உதிர்கின்றன....!

பாலாடை தனித்தெடுத்து
நெய்யாக்கி
சாதத்துடன் சேர்த்து தருகையிலே...
நினது பவளவாய் திறந்து
உண்ணும் அழகைக் காண
என் இரு கண்கள் போதாதடா.....!

மலர்களாலான தொட்டிலிலே
நின்னை படுக்க வைத்து
தாலாட்டும் போது
என்ன பாடுவதென்றுதெரியாமல்
நின் திருநாமம் பாடி
உறங்க வைத்தேனே.....!

நான் பாடும் பாடல் கேட்டு
செவ்விதழ் புன்னகை சிந்த
இமைகள் மூடி நீ தூங்கும்
தூக்கத்தின் அழகு இந்த உலகில்
எதற்குமே ஈடாகாது......!
- அருணாச்சலன் என் குழந்தை

எழுதியவர் : நித்யஸ்ரீ (25-Jan-16, 10:38 pm)
Tanglish : en kuzhanthai
பார்வை : 185

மேலே