அறுபத்து நான்காவது நாயன்மார்
இவர் பெயர் விக்னேஷ் ,இவர் கடவுளின் மீது அதீத பக்தி கொண்டவர் ,
எந்நேரமும் கடவுளையே நினைத்து உள்ளம் உருக பக்தியின் உயர்வுக்கே சென்று விடுவார் ,
இக் கலியுகத்தில் அதுவும் இந்த தொடு திரை அறிவியல் வாழ்வில் இப்படிப் பட்ட பக்தி கொண்ட ஒரு மனிதர்
இவரின் பக்தி உருகுதலுக்கு இவர் முன் எவரும் நிகரில்லை
கடவுளே ஆச்சரியம் கொண்டார் இவரின் பக்தியை பார்த்து ,கடவுளே இந்த பக்தி மான் முன் தோன்றினார் இவரால் நம்பவே முடியவில்லை
உடலெல்லாம் சிலிர்த்து அங்கமெல்லாம் நடுங்கி தேகம் எங்கும் மண் படிய கை கூப்பி கடவுளின் கால்களில் விழுந்து வணங்கினார்
கடவுள் அவரிடம் உன் பக்தியை கண்டு யாமே வியந்து போனோம் உனக்கு என்ன வேண்டுமானாலும் கேல் யாம் மறுக்காமல் அதை நான்வழங்குவேன் என்று வரம் ஒன்று அளித்தார்
அதற்க்கு பக்தனோ கடவுளே இந்த விஞ்ஞான உலகில் எங்கும் யாவும் அழுக்காறு படிந்துள்ளது எங்கும் மாசு நிறைந்துள்ளது இப்படியே சென்றால் இவ்வுலகம் இன்னும் ஓரிரு நூற்றான்டில் அழிந்து போகும் ,மனித இனமே மிஞ்சாது
தங்களை உள்ளம் உருகி வணங்க எக் காலமும் மனிதர் இப்பூவுலகில் போர் விடுத்து சுய நலம் அற்று ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்ட தங்களை உள்ளம உருக வணங்கி வாழ்தல் வேண்டும் இதுவே நான் தங்களிடம் வேண்டுகிறேன் எனாறார்
பெரும் வரம் ஒன்று கிட்டியும் அந்த வரம் தந்த எனக்கே என் நலனுக்காக நீ வேண்டியதால் உன்னை நான் அறுபத்து நான்காவது நாயன்மார்களாய் உன்னை இக் கலியுகத்தில் என்னுடன் சேர்த்துக் கொள்வதாக கூறி சேர்த்துக் கொண்டார்
,விக்னேஷ்