கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோ

சட்டத்தில் விரல் கொண்டு தாளமிடுவதில் தொடங்கும் இந்தப் பாடல்.... ரேவதியின் முக பாவனைகளில் கார்த்திக் ஒரு பூந்தோட்டம் கடப்பதை போல.. மெல்லிய மௌனத்தால் நகரத் துவங்கும்...

பச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு
குத்தந்கொற ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோ

இரவின் வெளிச்சம்... அந்த வீடு முழுக்க நிரம்பித் ததும்பும்... ரேவதியின் மனக் குமுறலின் நீட்சி அந்த ஊஞ்சலின் தாலாட்டலில்... தேவை தேடும்.. கார்த்திக் ரேவதியை சுற்றி சுற்றி.. தனக்கே உண்டான உடல்மொழியில்... மெல்ல மெல்ல.. ஒரு வித மென்சோக மறதிக்குள் இழுத்துக் கொண்டு போவார்... தூக்கம் வரவில்லை என்று ஜாடையில் கூறும் ரேவதியின் ஊஞ்சலை ஆட்டி விடும் கார்த்திக்.... ஒரு தோழனைப் போல... அன்பின் முழுமைத்துவத்தை ரேவதி மீது செலுத்துவதாக இருக்கும்.. வீட்டுக்குள் ஆட்டி விடும் ஊஞ்சல்.. ஆழியாரின் ஆற்றுக்கு மேலே அசையும் ஊஞ்சலின் கனவுக்குள் நாம் கண்கள் விரிய மெல்ல அசைந்து கொண்டிருப்போம்...

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோ

ரேவதி அந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருப்பது ஒரு குழந்தையை சமாதானம் செய்வது போலவே ஒரு தோற்றம் வருவதை இன்றும் உணர முடிகிறது........ பால்யத்தில் பார்த்த இந்த பாடல்... இன்னமும்.. கேட்டுக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது... காலத்தால் அழிக்கவே முடியாத பிம்பத்தை எனக்குள் நிரப்பி வைத்திருப்பதை நான் மிக சந்தோசமாக என்னிலிருந்து அசைபோட்டுக் கொண்டே இருக்கிறேன் ஒரு பாலைவனக் காட்டு ஒட்டகத்தின் தூர நடை போல.. அது...அசைந்து அசைந்து ஆழ்மனக் கூட்டுக்குள்... சிறகுகளை அள்ளித் தெளித்துக் கொண்டேயிருக்கிறது.....இடையே நிரவும்.... வெற்றிட தழுவலில்... ரேவதியின் புடவை... அந்த நீரோடையின் ஓரம்..புல்வெளி...பாறைகளின் இடையே ஒரு மெல்லிய தீபத்தைப் போல... காற்றில் மிதந்து மிதந்து.....செல்கையில்... காலத்தில் பின்னோக்கி ஓடி விடும் மனதுக்கு வயது ஏறவே இல்லை என்று நம்புகிறேன்......

பூநாத்து மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம்பாத்து வந்தவழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மாலை
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுல மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோ

வீட்டுக்குள் உலவும் வெண்ணிற இரவை... வரிகளின் கோர்வையில்... ஒரு கற்பனையின் வாசத்தை நாம் வாங்கி வாங்கி கொடுத்துக் கொண்டே போகும்.. ஒரு வகை மெஸ்மரிசக் கனவுக்குள்.. நீந்துவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.....எல்லாருக்குள்ளும் இருக்கும் ஒரு வகை நிரவலின் மீட்டலை இந்தப் பாடல்... எப்போதும்... மீட்டிக் கொண்டே இருப்பதை இப்போதும் உணர்ந்ததாலே எழுத தோன்றியது.....நிதானமான அமைதியை மனதுக்குள் தூவி விட்டும்....தூண்டி விட்டும் மிக மெல்லிய பாதங்களின் சப்தத்தைப் போல கடந்து விடுவதில்..... நான் எங்கோ ஒரு .. காட்டுக்குள்.....ஒரு நினைவுக்குள்...... ஒரு நீரோடையின் அருகே.. யாருமற்ற வெளியாய் தங்கி விடுகிறேன்......
அங்கே.... மர்மப் புன்னகையோடு... இளையராஜா... கடந்து கொண்டிருக்கிறார்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (26-Jan-16, 10:01 pm)
பார்வை : 193

மேலே