லிமரைக்கூ

கட்டவண்டி ஓட்டுறேன் காட்டுவழி
காத்துதிசைக்கு தலைய திருப்ப நெத்தி இடிச்சுது
நித்தம் நீவந்து மோதுற காத்துவழி

நெத்திசுட்டியில ஒட்டிகிச்சு மனசு
வெத்துத்தரையில கால்நீட்டி கெடக்க வந்து நனைச்ச
இந்தகாதலே இப்படித்தான் ஒருதினுசு

கத்திவெச்சு கிழிக்குது உன்பார்வை
சுத்திவெச்ச துணிச்சுருளா சுருண்டுகெடக்க பத்தவெச்ச
இதுவா நீசெய்யும் சேவை

எட்டி புடிக்குது திருட்டு பூனை
எங்க போனாலும் சுத்திசுத்தி உன்னையே துரத்தும்
என்கண்ணுதான் எனக்கு வினை

எழுதியவர் : (27-Jan-16, 9:39 pm)
பார்வை : 69

மேலே