நைட் ட்யூட்டி

நடு ராத்திரியில் அந்த போலிஸ் ஸ்டேஷன் ஃபோன் அடித்தது.
தூக்கக் கலக்கத்துடன் அதை எடுத்தார் டூட்டி கான்ஸ்டபிள் .
“ஹலோ..?”
“ஒரு திருடன் மாட்டிக்கிட்டான், உடனே வாங்க”
“மாட்டிக்கிட்டான்னா? எங்கே மாட்டிக்கிட்டான்? அட்ரஸ் சொல்லுங்க”
“மார்க்கண்டேயன் தெரு தெரியுமா?”
“தெரியும் சொல்லுங்க”
“அங்கே ஒரு பிள்ளையார் கோயிலுக்கு எதிர்வீடு”
”தெரியும்.. சொல்லுங்க”
“அங்கதான் சார் பெட் ரூம்ல சிக்கியிருக்கான்”
“ஓஹோ.. நீங்க யாரு?”
“நாந்தான் சார் அந்த சிக்கின திருடன், உடனே வந்து காப்பாத்துங்க சார்”
“அது கஷ்டம். காலைலதான் வர முடியும்”
“ஏன் சார்?”
“அவளுக்கு பயந்துதான்யா நான் பர்மனண்ட்டா நைட் ட்யூட்டி வாங்கிகிட்டு இருக்கேன்".....

எழுதியவர் : செல்வமணி (27-Jan-16, 10:29 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 222

சிறந்த நகைச்சுவைகள்

மேலே