பிரேதப் பரிசோதனை

வக்கீல்: டாக்டர்! பிரேதப் பரிசோதனை செய்றதுக்கு முன்னாடி நாடித்துடிப்பை செக் பண்ணிப் பார்த்தீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதிச்சீங்களா?
டாக்டர்: இல்லை….வக்கீல்: மூச்சுக்காத்து வருதான்னு பார்த்தீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: அப்ப உயிர் இருந்திருக்கிற வாய்ப்பு இருக்குதானே!
டாக்டர்: இல்லை
வக்கீல்: எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
டாக்டர்: ஏன்னா அந்த பேஷண்டோட மூளை என் முன்னாடி ஒரு ஜார்லே இருந்தது.
வக்கீல்: மூளை இல்லாம கூட உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறதல்லவா?
டாக்டர் (கிண்டலாக): இருக்கு. வக்கீலா பிராக்டிஸ் செய்யக்கூட வாய்ப்பிருக்கு.

எழுதியவர் : செல்வமணி (27-Jan-16, 11:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 147

சிறந்த நகைச்சுவைகள்

மேலே