உயிர்க் கரையும் ஒரு நொடி~சகா
ஆசையில்
அசைபோடும்
அழகுணர்ச்சியில்...!!!
வழுக்கி விழுந்தன
காதுகளுக்குள்
வர்ணங்களாய்
வார்த்தைகள்...!!!
வார்த்தைகளுக்குள்
சிக்காத வரிகள்
வந்து கானம் பாடியது
மூச்சே இசையாய்...!!!
துடிப்புகள்
வேராய் தெரித்தது
வீங்கி அடங்கிய
வெற்று மார்புகளுக்குள்...!!!
பேச்சை நிறுத்திய
போர்வைக்குள்
நரம்பு வரிகளில்
நாதம் மீட்டியது
இச்சைக்குள் இறங்கிய
இருவேறு துருவங்கள்...!!!
சத்தம் இல்லா
சாகசச் சண்டையில்
முத்தம் என்பது
முன் பணமோ...!!!
உச்சி முகர்ந்து
உதடுகள் துடித்து
பிச்சி எறிந்தது
பித்துப்பிடித்த
உணர்வுகள்...!!!
கூட்டிக் கழித்து
பெருக்கி வகுத்து
அரும்புகள் பூத்தது
வியர்வைத் துளியாய்...!!!
நாடி அடங்கியது
நாடிய அணுக்கள்,
முந்திச் சென்றது
முத்தாய்ப்போனது
மூச்சை நிறுத்தியது
தோல்வி கண்டது...!!!
(தலைப்பு தந்த நண்பர் ஜின்னா அவரகளுக்கு நன்றி)