பசுமை
- - - - - - -
வெண்ணுடல் கக்கும்
வானம்
வெண்மையாய் வாழும்
சுற்றம்
வசந்தத்தை வருடும்
தென்றல்
வாசலில் வருடும்
உறவு
பச்சையாய் போர்க்கும்
பூமி
பக்குவமாய் பார்க்கும்
நட்பு
நிறை கலசமாய் வழியும்
குளங்கள்
நிறை கவசமாய் நிலைக்கும்
நெஞ்சங்கள்
மலையினின்று வீழும்
நல் அருவி
மனதினின்று ஆளும்
நல் ஆட்சி
அழித்திட முடியா
அடர் வனம்
அழிந்திட மறுக்கும்
பள்ளிப் பருவம்
முத்துக்களாக சிந்தும்
பனித்துளி
வித்துக்களாக முளைக்கும்
நல் எண்ணம்
வாசனை கமழும்
பூக்கள்
வாசித்து நிலைக்கும்
நூல்கள்
தேசத்தை ஆளும்
பசுமை
நேசத்தால் வாழும்
பசுமை !
- பிரியத்தமிழ் : உதயா -

