தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து10---ப்ரியா

ரியாவின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் துளிகள் வசந்தின் கைகளை நனைத்தது...என்னங்க ஏன் இங்கு வந்து தனியா நின்னு அழுதுட்டிருக்கிங்க ஏதாவது பிரச்சனையா?நான் உங்களுக்கு ஒரு அழகிய பரிசு கொடுக்கலாம்னுதான் வந்தேன் என்ன விஷயம் என்று பரிவாய் கேட்டான்...!

ஒன்றுமில்லை கண்களில் தூசி விழுந்துவிட்டது என்று சமாளிக்க முயற்சி செய்தாள், ஆனால் அவனோ என்ன நீங்க சின்ன குழந்தைக்கிட்ட பேசுற மாதிரி பேசுறீங்க? என்னமோ மறைக்கிறீங்க?சொல்ல விருப்பம் இருந்தால் சொல்லுங்க இல்லன்னா பரவாயில்லை என்று சொன்னவன் தன் பாக்கெட்டில் கைவைத்து அந்த பாக்ஸை எடுத்துக்கொடுத்தான் இந்தாங்க என்னோட சின்ன கிப்ட் இன்னிக்கு நைட் இங்க சின்ன பார்ட்டி வைக்கணும் முடிச்சிட்டு நாளைக்கு இங்குள்ள சில முக்கியமான இடங்களை சுற்றி பார்த்துவிட்டு அடுத்த நாள் கிளம்பலாம் என்று அவன் பாட்டுக்கு இவளை எதுவும் கேட்காமல் அவனது முடிவுகளை சொல்லிக்கொண்டிருந்தான்.

அவன் கொடுத்த பரிசை திறந்து பார்த்தாள் லாவண்டர் நிற கல்பதித்த அழகிய மோதிரம் பார்க்க மிகவும் அழகாய் இருந்தது நல்லா பார்த்து பார்த்து செலக்ட் பண்ணியிருக்கான் என்று மனதிற்குள் நினைத்தவள்....எனக்கு எதுக்கு இதெல்லாம் என்று கேட்க?பரவாயில்ல வச்சிக்கோங்க என்று கைகளில் திணித்து விட்டு நகரமுற்பட்டான்.....

ஒருநிமிடம் என்று அழைத்தவள்.....அ....அது......வந்து,

என்ன அது வந்து போச்சின்னுட்டு இருக்கிங்க என்னன்னு சொல்லுங்க?

எனது தோழிகள் நானில்லாமல் தனியா இருக்கின்றனர் அம்மா அப்பா இல்லாத எனக்கு அவர்கள் தான் ஆதரவாயிருந்தனர் இப்பொழுது அவர்கள் பக்கத்தில் இல்லை என்பதால்தான் வருத்தம் அதான் என்னையும் அறியாமல் கண்கலங்கிவிட்டேன் என்றாள்!

சரி இருக்கட்டும் வருத்தம்தான்.....என்னிக்கும் இப்டி சேர்ந்து இருக்கப்போகிறீர்களா?இன்னும் சில காலங்களில் அவரவர் புது வாழ்க்கையை தேடிக்கொண்டு தனித்தனியாக தான் இருக்கப்போறீங்க இதெல்லாம் நினச்சி வருத்தப்படாதிங்க வாங்க என்று அழைத்து சென்றான்....!

எது எப்டியோ அவனுக்கு நம்ம மேல கொஞ்சமும் சந்தேகம் வரல எப்டியாவது வந்தனாக்கிட்ட போன்பண்ணி பேசி அடுத்து என்ன பண்றது என்று கேட்டுவிட வேண்டியதுதான் என்ற முடிவுடன் அவனுடன் தங்கும் அறைக்கு சென்றாள்.....

வந்தனாவிடம் பேசலாம் என்று அறையை விட்டு வெளியே,,,,, தனியாக வந்து பேச ஆரம்பித்தாள் இங்கு நடந்த அனைத்தையும் அவன் புகழுச்சிக்கு சென்று விட்டதையும் முழுமையாய் சொல்லி முடித்தாள்....

மௌனமாக இருந்த வந்தனா.......இரு நான் 1மணி நேரம் கழித்து அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டு கட் பண்ணினாள்.

கீதுவுக்கு பேசி பார்ப்போம் என்றவள் கீதுவை அழைத்தாள்.......

ஹலோ கீது பாட்டிக்கு எப்டி இருக்குது என்று முதல் வார்த்தையாய் பாட்டியைப்பற்றி கேட்டாள்?

பாட்டிக்கா?அத ஏன் கேட்குறா பாட்டி பேர சொல்லி ஒரு நாடகம் நடத்திட்டாங்கடி,பாட்டிக்கு ஒண்ணுமில்ல எனக்கு மணவாளன் பார்க்கத்தான் இவ்ளோ முயற்ச்சி என்று சொல்லி சிரித்தாள்....வந்தனாவை எவ்வளவோ கட்டாயப்படுத்தி அழைத்தேன் ஆனால் வரவில்லை....முதல்முறையாக உங்களை விட்டு தனியாக வந்திருக்கிறேன் என்று வீட்டில் அனைவருமே வருத்தப்பட்டார்கள் என்று வருத்தப்பட்டாள்.

அப்படியா ஏன் வந்தனா வரவில்லை நானும் ஊரில் இல்லாமல் போர் அடிக்குமே?

ஹேய் வந்தனா இன்னும் வசந்தை மறக்கலன்னு நினைக்கிறேன் அவன் போட்டோவை இன்னும் டைரியில் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறாள்........அதனால எனக்கு இங்கு எல்லாம் முடிந்த பிறகு நான் உடனே அங்க வந்ததும் முதல் வேலையா வந்தனா வசந்தை அழைத்து பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் அதுவரைக்கும் நீ எந்த தில்லு முல்லு வேலையும் பண்ணீராத என்று எச்சரிக்கை விடுத்தாள்...!

சரிடி!வந்தனா அவன் மேல் வெறுப்புடன் இருப்பதைப்போல்தானே சொல்லிக்கொண்டிருக்கிறாள், இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கு பேசுவாள் அப்பொழுது ஏதாவது கேட்டுப்பார்க்கட்டுமா?என்றாள் ரியா???

வேண்டாம்டி இப்போது எதுவும் அவளிடம் பேசவேண்டாம் நான் வந்த பிறகு அவனையும் அழைத்து பேசலாம் அதுவரை அவளிடம் வாய்திறக்காதே என்றாள்...!

நான் இன்னும் 2நாட்களில் இங்கிருந்து கிளம்புவேன் நீ எப்போது?என்று ரியா கேட்டாள்!

3நாட்கள் ஆகும்டி வந்து பேசலாம்......

மணவாளனை பார்த்தாச்சா?எப்டி இருக்காங்க?புடிச்சிருக்கா?

இல்லடி இன்னும் பார்க்கல பார்த்ததும் மெசேஜ் பண்றேன்.....அங்கு மிகவும் கவனமாக இருந்துகொள் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்...!

ஒரு நிமிடம் அமைதியாக நின்றுவிட்டு...? ஒரு பெருமூச்சுவிட்டு தனது கஷ்டத்தை வெளிப்படுத்திவிட்டு மறுபடியும் உள்ளே சென்றாள்.

அந்நேரம் அவன் அங்கு அமைதியாய் உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தான் இவளை பார்த்ததும் நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நான் என் ப்ரெண்ட பார்த்துட்டு வாரேன் என்றான்.....

சரி சார்!என்றவள் அவன் சென்றதும் கதவை அடைத்துவிட்டு கட்டிலில் போய் படுத்தாள்,சிறிது நேரம் படுத்தவள் என்ன நினைத்தாளோ? தெரியவில்லை மொட்டைமாடிக்கு சென்றாள் அந்த இடத்தின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள் சுற்றுவட்டாரங்களில் உள்ள நிறைய இடங்களும் அதன் அழகுகளும் அவள் கண்ணில் பட்டன.....ஒவ்வொன்றாக ரசித்தவள் ஒரு கடையின் வாசலில் வசந்த் நிற்பதைப்பார்த்தாள்..நண்பன் வீட்டுக்கு போறேன்னு சொன்னவன் இங்கு நிற்கிறான் என்ன?என்று ஒன்றுமே புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் 10 நிமிடங்கள் ஆகியும் அந்த இருக்கையை விட்டு நகராமல் ஹெட்செட்டை காதில் மாட்டி பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான் என்பது மட்டும் தெரிகிறது......!

அவனை தனது போனிலிருந்து அழைத்தாள்,எடுத்தவன் சொல்லுங்க என்ன ஏதாவது வேணுமா? என்றான்?

இல்லை நீங்க எங்க இருக்கீங்க?

நண்பன் வீட்டில் என்றவன் போனை காதில் வைத்துக்கொண்டே அங்குமிங்கும் பார்ப்பது மாடியில் நின்று பார்த்துக்கொண்டிருப்பவளுக்கு நன்றாய் தெரிந்தது....சார் சுற்றிசுற்றி பார்த்தது போதும் ஒரு பாட்டில் ஜூஸ் வாங்கிட்டு இங்க வாங்க நீங்க நண்பன் வீட்டுல இருக்கிறத நானும் பால்கனியில நின்னு பார்த்துட்டுதான் இருக்கிறேன் என்று சொல்லி சிரித்தாள்.....!

மாட்டிவிட்டோமே என்ற வெட்கத்தில் வருகிறேன். அது வந்து.... என்று இழுத்தான்......

அது என்ன வந்து போயி....முதல்ல இங்க வாங்க சார் என்று அவனது டயலாக்கையே அவனுக்கு திருப்பி சொன்னாள்.
உடனே கட் செய்துவிட்டு வேகமாக வந்தான்.

உள்ளே வந்தவன் இவளை பார்த்ததும் என்ன நீங்க???உங்கள ரெஸ்ட் எடுக்க சொன்னா இப்படி துப்பறியும் போலிஸ்காரர் மாதிரி எல்லாம் கண்டுபுடிக்கிறீங்க?????

எதுக்கு சார் பொய் சொன்னீங்க?என்றாள்?

உங்களுக்காகத்தான் வேற வழியில்லாமல் தான் அப்டி பொய் சொன்னேன்.....

எனக்காகவா????புரியவில்லை.

எனக்கு இங்க நண்பனே கிடையாது, நாம் தங்குவதற்கு தனிதனி அறைகிடைக்கவில்லை..... உங்களால் நிம்மதியாக எப்டி என்னுடன் இருக்க முடியும்? முடியாது இல்ல? அதனால்தான் இப்டி ஒரு பொய் சொல்லி வெளியில் கடையில் போய் உட்கார்ந்துகொண்டேன் என்றான்.....

அப்டியா?சரி! பரவாயில்ல 2நாட்கள் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்று அவள் சொன்னதும் சரி பொய் சொன்னதுக்கு மன்னித்து விடுங்கள் என்றான்....

இவளுக்கு ஒரு யோசனை தோன்றியது??

வந்தனாவைப்பற்றி மறைமுகமாக கேட்டால் என்ன?

சார் உங்களுக்கு கல்யாணமாயிடிச்சா? கல்யாணமாகவில்லை என்று தெரிந்தும் அப்டி கேட்டாள்!

இல்லை!என்னைப்பார்த்தால் எப்டி தோணுது..? என்று கைகளை நீட்டி கண்களை சிமிட்டி கேட்டான்?

யாரையாவது காதலிக்கிறீங்களா?என்றாள்?

காதலா?எனக்கா?என்று பரிகாசமாய் சிரித்தான்.

ஏன் என்று முறைத்து சிரிப்பதைப்போல் கேட்டாள்???

காதலித்தால் கொஞ்ச நாள் காதலி என்று சுற்ற வேண்டும் அதன் பிறகு எல்லாத்தையும் விட்டிரவேண்டியதுதான்......

எனக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும்,பணத்திற்கும்,புகழிற்கும் மறு பெயர்தான் வசந்த் என்றிருக்கவேண்டும்.... பணத்தைக்காட்டினால் காதல் கல்யாணம் எல்லாம் அதன்பிறகு தானே கியூவில் வந்து நிற்கும் என்று வித்தியாசமான தோரணையில் சொல்லிக்கொண்டிருந்தான்.........என் அந்தஸ்துக்கு முன்னால சொடுக்கு போட்டால் ஆயிரம் பெண்கள் என்னை சுற்றிவருவார்கள் என்று சொல்லிவிட்டு அவளைப்பார்த்தான்??????

அவள் அவனை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள்......


தொடரும்.....!

எழுதியவர் : ப்ரியா (29-Jan-16, 10:09 am)
பார்வை : 343

மேலே