முதல் ஆசான்
அன்பைப் பெறுவதில்
ஆசையை வளர்ப்பதில்
இச்சையை இழப்பதில்
ஈகையை வளங்குவதில்
உயிராய் இருப்பதில்
ஊரோடு ஒத்துவதில்
எத்திக்கும் செல்வதில்
ஏடுகளை கற்பதில்
ஐயமின்றி வாழ்வதில்
ஒத்துழைக்க வருவதில்
ஓய்வின்றி உழைப்பதில்
ஔவைக் காத்தலில்
அகத்தே எனக்கு முதல் ஆசான்
என்னை ஈன்றெடுத்த தந்தை !......
******************தஞ்சை குணா******************