செங்கல் ஒன்று கண்டேன்
செங்கல் ஒன்று கண்டேன்
ஊர்க் குப்பையிலே
கேட்பாரற்று
செங்கல் ஒன்று குப்பையிலே
ஒரு காலம் அழகான் கட்டிடத்திலே
இன்று கேட்பாரற்று.
செங்கல் ஒன்று வீ தியிலே
ஒரு பொழுது ஒரு கோபுரத்திலே
இன்று கேட்பாரற்று.
செங்கல் ஒன்று பெயர்ந்து
ஒரு வேளையில் ஒரு மாளிகையில்
இன்று கேட்பாரற்று.
செங்கலின் விதி மாற
புகழுடன் வாழ்ந்த காலம் போக
இன்று கேட்பாரற்று .
செங்கலுடன் மட்டும் போகாமல்
மனிதனும் பிறனும் உட்படுத்த
நீயும் நானும் கேட்பாரற்று.