பெற்றோரின் பாசம்

- - - - - - - - - - - - - - - - - - -
இரத்தமும் சதையும்
சேர்த்து பிண்டம்
ஆக்கியவள்
அன்னை
அணுக்களை உயிர் பிழிந்து
உணர்வு பிசைந்து
உயிர் ஆக்கியவன்
தந்தை
பாசத்தை பாலால்
சுரந்தவள்
நேசத்தை நெஞ்சால்
நிறைத்தவன்
உடலில் உள்ள அத்தனை
மண்டலங்களும்
செயலிழக்க
எனக்கு உலகு காட்டியவள்
உயிர் செத்து
உலகில் மீண்டவள்
என்னை ஏந்தியதால்
பெற்றோர்கள் என
பெயர் பெற்றவர்கள்
வெற்றுச் சொற்களால்
பாசத்தை வரைந்து
கொல்லச்
சொல்கிறார்கள்
உயிரோட்ட உணர்வின்
உச்சங்களை வரிகளில்
கட்டிப் போடச்
சொல்கிறார்கள்
வெறும் தலைப்பிட்டு
கவிபாட இது
அரங்கிற்குள் நுழையாது
காணாது. ....
கண் பார்வையிலும் கருணை
உணர்வில் ஊற்றிய அன்புச்சம்
வானம் கடல் காற்று பூமி என
வரையறுத்து
உரைத்து விட முடியா
பேரிடி மழை !
- பிரியத்தமிழ் : உதயா -