அரிச்சந்திரம்

- - - - - - - - - - - -
அது ஒரு
அரிச்சந்திரன் காவல் செய்த
மயானம் !
எல்லோருக்கும் பிடிக்கும்
பூங்காற்று அங்கும்
இங்கும் அலைந்து திரிந்து
வரும் பிணவாடையை புசித்துக்
கொண்டிருந்தது !
பசியின் அகோரத்தில்
வாய்க்கரிசியும்
நெற்றியில் கிடந்த ஒரு
நாணயக் குற்றியும்
அகோரியின் உண்ட
சதைப் பிண்டங்களோடு
மீதமுள்ள நிலையில்
பிடிக்கும் என்று சேர்த்து
பெட்டிக்குள் வைத்த பீடி
வாயில் இருந்து
புகை விட்டுக் கொண்டிருந்தது !
பாவம் அரிச்சந்திரம்
இன்னும் வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறது ......!
- பிரியத்தமிழ் : உதயா விவேக் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (29-Jan-16, 6:51 am)
பார்வை : 68

மேலே