நிலாச்சாரல்

- - - - - - - - - - - -
அது ஒரு
இனிமையான நிலாச்சாரல் !
இரவு விழித்துக் கிடக்கிறது .
தென்னோலையில்
குடிவாழ்ந்த
தூக்கணாங்குருவி
குசும்புக் கதை பேசுகிறது
என்னோடும் என் தங்கையோடும்
கூடவே நடந்து வருகிறது
ஏன் வீட்டுக்குள் வர மறுக்கிறது
இந்த நிலா. ....?
மணல் மேட்டின்
கதகதப்பு
குளிர்வை தழுவுகிறது
மாம்பழத்தின்
வௌவால் கொந்தல்
இனிமையை சுவைக்கிறது
வீட்டோரக்
காவல் துறை
துள்ளி விளையாடுகிறது
ஆட்டுக்குட்டியின் அன்பு
தாயைக் கொஞ்சுகிறது
ஒழிந்து கிடந்த
அணில் குஞ்சு குறுகுறுத்து
கீச்சிடுகிறது
அம்மாவின் குளைசோறு
நாவெல்லாம் இனிக்கிறது !
ஈரம் தோய்ந்த நிலவு
பால் வெள்ளை மனது அவளுக்கு !
தேசம் முழுவதும் .....
இல்லையில்லை
உலகு எங்குமே பாகுபாடின்றி
பூத்துச் சிரிக்கிறாள்.......!
- பிரியத்தமிழ் : உதயா -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (29-Jan-16, 6:44 am)
பார்வை : 77

மேலே