வெல்லாமல் மாளோம்

நேர்மையிலே சேவையிலே ஒருமைப் பட்டு
நெஞ்சாரக் கடமையிலே ஈடுபட்டு
தார் வேந்தர் தமிழ் மணிகள் பாதை சென்று
தரிசான நிலங்களை உழுது வாழ்வோம்
வேர்வையில் கண்ணீரில் மிதக்கும்
வாழ்வை
முற்றிய மணிகொண்டு தலைசாய்க்கும்
நெற்கதிர்களை கரத்தினால் அணைத்து மகிழ்வோம்
மண்மணம் மாறாமல் உழவுத்தொழிலை
மண்ணில் மாண்டாலும் மங்காமல் செய்வோம்
போர்வையிலே மறைகின்ற புலிகள்அல்ல நாங்கள்
போகபோகமாய் விளைவிக்கின்ற மறவர்கள் நாங்கள்
வெல்லாமல் வறுமைத்தேள் கடியாமல் மாளோம்
விடிவுதரும் காலத்தை எதிரே காண்போம்
எதிர்காலத் சந்ததியை செழிக்கச் செய்ய
ஏற்றபல பணிகளை தலையிற் கொள்வோம்.....

எழுதியவர் : உமாபாரதி (29-Jan-16, 7:03 pm)
பார்வை : 215

மேலே