நினைவலைகள்

நினைவலையில் நீங்காமல்
நின்று விட்ட நாள்
பள்ளி பருவத்தில்-என்
மனதில்
பதிந்து விட்ட நாள்.
அழுகையோடு-என்
வாழ்க்கை
ஆரம்பித்த நாள்...

சின்னதொரு
வீட்டில்
சில்லரை போல்
சிரித்து
சிறு குழந்தை
பட்டத்தில்
சில நாட்கள்
கிடந்தவனை
கல்வி கூடம்
சேர்த்திடவே
சேர்ந்தார்கள்
என் வீட்டில்
என் வீட்டின் பெரியவர்கள்...

சிறை தானோ
பள்ளி கூடம்?
சிந்தனையில்
மிதக்கின்றேன்...

விடிந்தால்
தெரிந்து விடும்
விடுகதை
புரிந்து விடும்...

அழுதேன்
ஆனாலும்
சிரித்தேன்-என்
புத்தாடையை
நினைத்து...

எனக்கும் ஆசைதானே
படிக்க...
படித்தால் தானே
வாங்க முடியும்
விளையாட்டு
பொம்மைகள்...

பள்ளிக்கூடம்
பழகிவிட்டது...
கல்வி கூடம்
கனவு கூடமானது...

இப்போது தான்
தொடங்கினேன்
முடித்து விட்டேன்
தொடக்க பள்ளி...

ஆசையில்
ஆறாம் வகுப்பு
ஏக்கத்தில்
ஏழாம் வகுப்பு
ஏன் வந்தது
எட்டாம் வகுப்பு?
ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு

படித்து முடித்துவிட்டேன்
பனிரெண்டாம் வகுப்பு?

எழுந்து பார்த்தால்
ஏழு மணி
கனவு முடிந்து விட்டதாம்
கற்பனை தீர்ந்து விட்டதாம்
இனி தான்
ஆரம்பமாம்
பள்ளி வாழ்க்கை...

என்றும் அன்புடன்...
பாலா

எழுதியவர் : software bala (29-Jan-16, 7:33 pm)
சேர்த்தது : பாலச்சந்தர்
Tanglish : ninaivalaigal
பார்வை : 395

மேலே