அறிவாயே மங்கையே

அறிவாயே மங்கையரே !

அழகான வண்ணமயில்கள்
அழகு தோகையை மறைக்குதோ !

அழகு பச்சைக் கிளிகள்
வண்ண பச்சையை மறைக்குதோ !

கள்ளமில்லா குழந்தைகள்
கன்ன சிரிப்பழகை மறைக்குதோ !

வெள்ளி நிலவின் அழகையே
வெண்மேகம் மறைத்தல் அழகோ !

கொள்ளையழகு முகங்களையே
காரிகையர் துணிபோர்த்தி மறைப்பதோ !

மறைக்க…மறைக்க ஆவலுண்டு
மனஇயல்பை அறிவாயே மங்கையரே!

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (29-Jan-16, 9:07 pm)
பார்வை : 89

மேலே