அம்மா

கருவழிக்கும் இக் காலத்தில்-என்
உறவழிக்க மனமில்லையோ?
ஊஞ்சல் கட்ட வழியின்றி
ஊசல் ஆடுகிறோயோ?

கல் தலையில் பாரம்-சிறு
குழந்தை நான் பாரம்
உலகம் சொல்லும் நாம் பாரம்.
உண்மை சொல்
யார் தான் பாரம்?

கருப்பாக நானிருந்தும்
கட்டி தங்கம் நானென்றாய்.
காக்கைக்கு தன் குஞ்சு
பொன் கொஞ்சு.
தாயே நீ
காக்கை தானோ!
இரவு பகல் காக்கும்-என்
காக்கை தானோ?

என்னை சுமந்தவள் போல்
உன்னையும் சுமந்திருப்பாள்-அவளை
சுமை யென்று நீ சொன்னால்- நீ
சுகம் காண
கண் மூடி கண் அயர்வால்
கல்லறையில்
கடவுளாக...

என்றும் அன்புடன்
பாலா

எழுதியவர் : பாலச்சந்தர் (29-Jan-16, 7:29 pm)
சேர்த்தது : பாலச்சந்தர்
Tanglish : amma
பார்வை : 605

மேலே