காட்சிப்பிழைகள்,52 பொள்ளாச்சி அபி

ம்..ம்..ம்..ம்-ம்..ம்..ம்..ம்.

என் வாழ்க்கை உன் கையில்
என் மரணமும் உன் கையில்

என் வாழ்க்கை உன் கையில்
என் மரணமும் உன் கையில்..

விழிப் பார்வையில் உயிர் தந்தாய்
இமைப் பொழுதிலே ஏன் கொன்றாய்.. (என் வாழ்க்கை)

அந்தக் கம்பனைக் கேட்போமா..
உந்தன் சீதை மிக அழகா..?

அந்தப் பாரதி வருவானா..,
உன்னைப் பாடலாய் படிப்பானா..?
ஒரு நாளில் முடியாதே..,
பல ஜென்மம் கேட்பாரே..!
வண்ண ஓவியம் சிறந்ததில்லை.,
இன்னும் காவியம் பிறக்கவில்லை-2-..!
- (விழிப் பார்வையில்)

இந்த இளமை தகிக்கிறதே..
பெருமழையை கேட்கிறதே..!

உன் கூந்தலை சிதறவிடு..
இந்தப் புவியையும் சிரிக்கவிடு..!
மென்காற்றாய் பரவிவிடு..
என் உயிரில் கலந்துவிடு..!
உயிர் மூச்சை இசைக்கின்றேன்..,
அதில் கவிதையாய் இருந்துவிடு..! -2-
- (விழிப் பார்வையில்)


என் மௌனத்தை ரசிக்கின்றாய்.
மன சாட்சியை மறுக்கின்றாய்..

மாறாது காதல் நதி
வேறாகும் வாழ்க்கை விதி
சாதிமதங்களைத் தொலைப்போம் வா..
புதுவேதங்கள் படைப்போம் வா..

வா..வா..வாழ்ந்திடுவோம்..!
அந்த வாழ்க்கையைப் பாடிடுவோம்..! ( விழிப்பார்வையில்)
===============

கஜல் பாடல்கள் குறித்து தேடும்போது கிடைத்த ஒரு பாடலின் ராகத்தோடு எனது வரிகளையும் ( மொழியாக்கம் அல்ல..)- இணைத்துள்ளேன்.எண்ணம் பகுதியில் பாடலோடு இயங்கும் வீடியோக் காட்சியை வாய்ப்பு இருந்தால் நீங்கள் ரசிக்கலாம்.
-------பொள்ளாச்சி அபி.-30.01.2016

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (30-Jan-16, 12:41 am)
பார்வை : 431

மேலே