காலங்கள் தா

கல்விகற்க செல்கின்றக் காலத்தில் கஷ்டத்தால்
கல்லுடைத்து வாழ்வோட்டும் எங்களுக்குச் – சொல்லிக்
கொளவென்று சொந்தம் எதுவுமில்லை. தெய்வம்
மெனக்கெட்டு செய்த பிழை.

தெருவில் கிடப்பதற்கு தெய்வம் படைக்கும்
உருவம் எமக்கான திங்கே – கருவில்
சுமந்தவள் கைவிட்டுப் போக வறுமை
சுமந்திங்கு வாடுகிறோ மே.

இழப்பதற்கு கென்றெதுவு மின்றி உரத்து
அழக்கூட தெம்பின்றி வாழப் – பழகிவிட்டோம்
காலமே கண்ணீரில் கோலங்கள் தீட்டாத
காலங்கள் எங்களுக்குத் தா.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Jan-16, 1:32 am)
Tanglish : kaalangal thaa
பார்வை : 152

மேலே