முடிவு பெறா பயணங்கள்

      முடிவு பெறா பயணங்கள்

இதமாய் உறங்கிய பொழுதுகளில்
இரவுக்காய் இமை 
காத்திருப்பில் இரவும்
போர்த்திக் கொள்கிறேன்
உன் நினைவுகளை..

துடிக்கிறேன் உனைக் காண
கண் திறந்த போது 
என்னையே மறந்து
மீண்டும் போர்வைக்குள்.

போகும் பாதையெங்கும்
நடை பழகும் 
சுவடுகளில் 
நீயும் நானும் 
பழகிக் கொள்கிறேன்

நீ பேசும் மொழி அறிய
பழகுகையில்
மொழியாகிறேன்
உன் விழி அழுகையில்
உப்பாகிறேன்

நீ உதிர்க்கும் வார்த்தையில்
உயிராகிறேன்
கபடமின்றி என்னில்
குழந்தையாகிறேன் 

அறிமுகமான தருணத்தில் 
நாம் மட்டும்
புது வாழ்வில்
புது உலகில் .....அர்த்தமற்று
பிரிந்து போனோம்
உறவை எண்ணி..

உன் 
நினைவுகளையேனும் 
எனக்குக் கொடு
தனிமையில்
நான் பேசிப் பழகிக் கொள்கிறேன்
உன்னோடு

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (30-Jan-16, 4:37 am)
பார்வை : 143

மேலே