ஆதியந்தம் இல்லா அருள்ஜோதியே

நானே ராஜா (25.01.1956) என்ற திரைப்படத்தில் 'வில்லாளன்' என்கிற கதாநாயக, வில்லன் பாத்திரத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆதியந்தம் காணமுடியாத சிவலிங்கத்தைத் துதித்து, போற்றிப் பாடும் 'ஆதியந்தம் இல்லா அருட்ஜோதியே' ஓர் அருமையான பாடல்.
இப்பாடலை கவிஞர் கே.பி.காமாட்சிசுந்தரன் இயற்றி, டி.ஆர்.ராமநாத் இசையமைத்து, டி.எம்.சௌந்தரராஜன் ’கல்யாணி’ ராகத்தில் பாடுகிறார். பாடல் வரிகளை யு ட்யூபில் கேட்டு, பதிவு செய்திருக்கிறேன். நீங்களும் பார்த்தும், கேட்டும் ரசியுங்களேன்.
ஆதியந்தம் இல்லா அருள்ஜோதியே!
ஆண்டவனே என்னையே ஆளும் தயாநிதியே! (ஆதியந்தம்)
நீதி முறை நாட்டில் நிறைந்தோங்கவே
நீ அருளே புரிவாய் எம்மானே! (நீதி முறை)
வேதங்கள் காணாத மலர்ப்பாதனே
அம்மையே அப்பனே உண்மையின் உருவமே! (ஆதியந்தம்)
தந்தை தாய் சுற்றமெனும் பந்தபாசம் தன்னைத்
தந்ததல்லால் இன்பம் தந்ததுண்டோ ஐயா! (தந்தை)
முன்னை வினை என்ன செய்திருந்தாலும்
இன்னம் என் பிழை தன்னைப் பொறுத்தாளுமே!
எந்த ஜென்மம் வரினும் ஜெகதீசனே
எந்த ஜென்மம் வரினும் ஜெகதீசனே
உன்னை சிந்தித்திடும் வரம் தா பெருமானே! (எந்த ஜென்மம்)
அன்பு சிவம் இரண்டும் ஒன்றல்லவோ
அன்பு சிவம் இரண்டும் ஒன்றல்லவோ
அம்மையே அப்பனே உண்மையின் உருவமே! (ஆதியந்தம்)