குளவிகள் பழமொழி கவிதைகள் - 3
நயத்தில் ஆகாதது
பயத்தில் ஆகுமோ...
அடித்தும்,ஆர்ப்பாட்டம்
புரிந்தும் காரியம் சாதிப்பர்
பணம் ஒன்றே பிரதானம் என்று
மனங்களை தொலைத்தவர்கள்
நன்மை நினைத்து
நயந்த நல்வார்த்தையில்
ஈடேறாத எண்ணங்கள்
என்றேனும்
பயம் காட்டி ஈடேற்ற முடியுமா...
பேசிய சொற்களும்
புரிந்த செயல்களும்
மாற்றிடாது மனோபாவங்களை
இழைந்து பேசினாலும்
இறைந்து பேசினாலும்
தீயவர் தீயவரே
கொட்டினாலும்,கொட்டாவிட்டாலும்
குளவி குளவியே