மூடர்கள் பழமொழி கவிதைகள் - 4
அடியாத மாடு பணியாது
அடித்து உதைத்து தான்
நினைத்ததை சாதிப்பவர்களே
அடித்து கொண்டேயிருந்தால்
மாடும் உங்களை மதியாது
மாடே மதியாத மனிதரிடம்
மாடமாளிகைகள் இருந்தாலென்ன
மரியாதை இருந்தென்ன
குணத்தை குப்பையிலே வீசிவிட்டு
பணத்தை சட்டைப்பையிலே போட்டவர்களுக்கு
மனம் மட்டுமென்ன
வலிக்கவா செய்யும்
பல்லிளிக்கவும் செய்யும்
புரட்டி புரட்டி பேசவும் செய்யும்
கெஞ்சும்,கொஞ்சும்,மிஞ்சும்
வஞ்ச நெஞ்சங்களின்
வாஞ்சை மட்டும் நிஜமல்ல
மூடர்கள் இவர்கள்
முரண்பட்ட பேச்சுக்கு
முதலாளிகள் அடிபட்ட
பாம்புகள்