சுயநல காக்கைகள் பழமொழி கவிதைகள் - 5

தேன் தடவிய சொற்களுக்கு
சொந்தக்காரர்கள் சிலர்
கைகள் மட்டும் உதவி என்றதும்
பின்னிழுத்து கொள்ளும்
முன் கை நீண்டால்
முழங்கையும் நீளும் இவர்களுக்கு
வேண்டியதை இவர்களுக்கு
வேண்டியதை பெறும்போது மட்டும்
தன் தேவைக்கு பேசும் சொற்களில் கூட
தேடி தேடி பேசி தேன் தடவி பேசி
காரியம் சாதிக்கும் இவர்கள்
சொற்கள் கூட
விரையம் செய்ய இயலாத
அற்பர்கள்
சொற்களை உதிர்க்காதிருந்தே
பிறரை அழித்திடுவர்
சுயநலம் மிக்க காக்கைகள்