உழைப்பு

உடலுக்குத் தேவை உழைப்பு –அது
இல்லையெனில் ஏது பிழைப்பு.
உழைத்தால் கிடைத்திடும் உயர்வு- ஒரு
உண்மையாய் நிலைத்திடும் மதிப்பு.

மூன்றாய் பிரித்திடு நாளை- அதில்
முதலிடம் பெறுவது வேலை.
அடுத்து இருப்பது தூக்கம்-மீதி
இருப்பதில் தணித்திடு ஏக்கம்.

உழைத்து வாழ்வது இன்பம்-அதில்
ஓடி ஒளிந்திடும் துன்பம்
நாடும் உயர்ந்திடும் பாரு-பல
நல்லன விளைவதைக் கூறு.

சேற்றில் வைக்கணும் காலை-உன்
கழுத்தில் விழுந்திடும் மாலை
உற்றவர் யாவரையும் பேணு-அதில்
உருகிடும் உறவினர் காணு.

விளைச்சல் நிலத்தை அழித்து- பல
வீடுகள் கட்டலை நிறுத்து.
சிறந்து நிற்கும் வாழ்வு –உனைச்
சுற்றி வாராது தாழ்வு.

உழைப்பவர் தினத்தைப் போற்று-புது
ஒளியினை நாட்டில் ஏற்று.
பழிப்பவர் உள்ளத்தை மாற்று-அதில்
உழைப்பின் பெருமையை ஊற்று.

நாட்டுக்கு உழைத்தவன் பாரதி-தமிழ்
பாட்டுக்கு அவன்தானே சாரதி.
விடுதலைப் போரிலும் கலந்தான்-தன்
பாட்டிலும் அதனைத் திணித்தான்.

உழைப்பவர் துயரினை அறிந்தான்-அவர்
உரிமை பெறவே துடித்தான்.
பிழைக்கும் வழிகளைச் சொன்னான்-அவர்
பயத்தினை விலக்கிட உழைத்தான்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (30-Jan-16, 7:43 pm)
Tanglish : ulaippu
பார்வை : 120

புதிய படைப்புகள்

மேலே