பேச்சு வழக்கிலுள்ள இணைச்சொற்கள் பகுதி 1

நேற்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது இரண்டு சந்தர்ப்பங்களில் கண்ட துண்டமா வெட்டிப் போட்டு விடுவேன் என்ற வசனம் வந்தது.

கண்ட துண்டம் என்று வலைத்தளத்தில் தேடும்போது, தமிழ்வு (tamilvu) தளத்தில் இணைச்சொற்கள் பற்றிய தொகுப்புக் கிடைத்தது. கண்ட துண்டம் பற்றி வேறு சந்தர்ப்பத்தில் கட்டுரையாக எழுதவுள்ளேன்.

இப்பொழுது இணைச்சொற்கள் (பகுதி 1) கீழே:

அருமை பெருமை, அக்குத் தொக்கு, அந்தியும் சந்தியும்

அகட விகடம், அல்லும் பகலும், அலுங்காமல் குலுங்காமல்

ஆதி அந்தம், ஆய்ந்து ஓய்ந்து, இண்டு இடுக்கு

ஆடல் பாடல், ஆடை அணி, ஆண்டான் அடிமை

இயலும் செயலும், இளைச்சுக் களைச்சு, ஈவு இரக்கம்

ஈடு தாடு, உண்டு உடுத்து, உருட்டும் புரட்டும்,

உருண்டு திரண்டு, உருண்டு புரண்டு, உள்ளது உரியது

உற்றார் உறவினர், எகனை மொகனை, ஏடா கூடம்

ஒட்டி உலர்ந்து, ஒப்பு உயர்வு, ஒட்டி உணர்ந்து

எக்குத் தப்பா கண்டது கடியது குண்டக்க மண்டக்க

கங்கு கரை, கஷ்ட நஷ்டம், கண்டது கேட்டது.

சில இணைச்சொற்களை திரையிசைப் பாடல்களிலும் நாம் கேட்டிருக்கிறோம்.

1. ஆதி அந்தம் இல்லா அருட்சோதியே

2. அல்லும் பகலும் பசியால் வாடி

3. ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ

4. ஒப்புயர்வில்லாத தத்துவம் தமிழ் நாட்டில் ஒன்றல்ல இரண்டல்ல தம்பி

எகனை மொகனை என்ற இணைச்சொற்களுக்குப் பொருள் என்ன தெரியுமா?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-16, 9:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 301

மேலே