இது வேற யாருக்கும் இல்ல உனக்கே உனக்கு தான்
![](https://eluthu.com/images/loading.gif)
புவி ஈர்ப்பு இல்லா பறவை ஆனேன்...
உன் விழி ஈர்ப்பு அதனால்...
பெண்ணே(அன்பே)
எனக்காக தாஜ்மகால்
கட்ட வேண்டாம்..
ஒரு சமாதி கட்டிவிடு
உன் இரு கைகளுக்குள்....
பல்லி விழும் பலன் எனக்கு வேண்டாம்...
அன்பே என்மேல் நீ எரிந்து விழும்
பலன் வேண்டும் நாளும்
எழுதும் எழுத்தில் மொழியாகிறாய்...
அன்பே மீண்டும் எழுத்து கேட்கவில்லை உந்தன்பால்...
கண்ணே கண் சிமிட்டல் அது போதும்
கண்ணீர் சிந்திடுவேன்...
மெல்ல சிரித்து எனை
மென்று தி(ண்)ன்கிறாய்...
வரம் ஒன்று கேட்பேன் இறைவனை
உந்தன் கையோடு உறவாடும்
கைக்குட்டையாகிட...
~பிரபாவதி வீரமுத்து