பரோட்டா சாப்பிடுவது எப்படி
1, முதலில் இரண்டு பரோட்டாக்களும் ஒரு ஆம்லெட்டும் ஆர்டர் பண்ணவும், ( பரோட்டா பொன்னிறமாக படத்தில் உள்ளது போல் இருப்பது நல்லது, சுவையை கூட்டும்)
2, வாங்கிய பரோட்டாவை சரியாக 2.5 இன்ச் நீளத்துக்கு தனி தனியாக பிய்த்துபோட்டுக்கொள்ளவும்,
3, பிய்த்து போடப்பட்ட பரோட்டக்களை மலை போல குவிக்கவும், இப்போது நடுவில் மட்டன் அல்லது சிக்கன் குழம்பை ஊற்றவும்,
4, குழம்பு கலக்கப்பட்ட பரோட்டாவை சாதம் பிசைவது போல மென்மையாக பிசையவும்! பிசைந்துவிட்டு 1 நிமிடம் பொறுமையாக இருக்கவும்! (அப்போதுதான் குழம்பு சமமாக பரவும்). மீண்டும் குழம்பை வாங்கி மேலே ஊத்தவும்!
5, இப்போது பிசைந்த பரோட்டாவில் ஒரு வாய் எடுத்து தயாராக உள்ள ஆம்லேட்டில் ஒரு வாய் கலந்து சாப்பிடவும்! இதுதான் பரோட்டா சாப்பிடும் முறை!