பக்கத்து வீட்டு கமலா
கணவன்:- எங்கிட்ட இருந்து வீட்டு செலவிற்குன்னு பணம் வாங்கிக்கிட்டு புதுசு புதுசா புடவை வாங்கி சேர்த்துக்கிட்டு இருக்கே...! இந்த இரண்டு புடவையையும் இதுக்கு முன்னாடி நான் துவச்சதே இல்லையே!
மனைவி:- அட நீங்க வேற! அது நம்ம பக்கத்து வீட்டு கமலாவோட புடவை! அவ புருஷன் வெளியூர் போயிருக்காராம்!
கணவன்:- அடிப்பாவி! உன் புடவையை துவைக்கறது போதாதுன்னு, பக்கத்து வீட்டுக்காரியோட புடவையையும் சேர்த்து துவைக்கணுமா..?
மனைவி:- சும்மா கத்தாதீங்க...! போன மாசம் நீங்க ஒரு வாரம் ஆபீஸ் டூர் போயிருந்தப்போ, என்னோட நாலு புடவையை துவச்சு கொடுத்தது அவ புருஷன்தான்!
கணவன்:-?😭?😭