எம் பையன் பேரு துணியா

உம் பையன் பேரு என்னடா தம்பி?


அண்ணே எம் பையம் பேரு துணியா.

அதென்னடா பெத்த பிள்ளைக்கு துணியா வேட்டியா துண்டா -ன்னெல்லாம் பேரு வைக்கறதா?

அண்ணே போன வாரம் ஒரு இந்தித் தொலைக் காட்சி தொடர் பாத்தேன். அந்தத் தொடர்ல அடிக்கடி துணியா, துணியா -ன்னு ஒரு வார்த்தையச் சொன்னாங்க. பக்கத்து வீட்டுக்கார இந்தி ஆசிரியர்கிட்ட துணியாவுக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன். அவுரு 'உலகம்' ன்னு சொன்னாரு. துணியா ..... சொல்லறதுக்கு இனிமையா இருக்குதேன்னு அந்தப் பேர எம் பையனுக்கு வச்சுட்டேன் அண்ணே. சரி. உங்க பையன் பேரு என்ன அணாணே?

எம் பையன் பேரு லோகநாதன்.

அண்ணே லோகநாதன்ங்கற பேரும் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்திப் பேரு தா அண்ணே.

எங்க கொஞ்சம் வெவரமா சொல்லுடா தம்பி.

அண்ணே லோக் - ன்னா உலகம். அது தமிழ்ல லோக- ன்னு மாத்திக்கிறோம். நாத் - ன்னா தலைவன். அத நாதன் - ன்னு சொல்லறோம்.

அட எழவே இதுவரைக்கும் லோகநாதன்ங்கற பேரு தமிழ்ப் பேருன்னு தான்னு நெனச்சிட்டு இருந்தேனே

@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (31-Jan-16, 2:46 pm)
பார்வை : 162

சிறந்த நகைச்சுவைகள்

மேலே