இசையின் திறன் அதுவே
பாட்டு ஒன்று கேட்டது
வெகு தொலைவிலிருந்து
காற்றோடு கலந்து
தவழ்ந்து வந்து
செவியோடு உரசியது.
மொழி தெரியவில்லை
ஏறக்குறைய நின்றேன்
ஒரு மணி நேரம்
அசையாமல் அங்கு
கால் வலியை மறந்து
மனம் ஒன்றி
பார்வை நிறுத்தி
உடல் பொருந்தி
நின்றேன் சிலையாக.
என்னை மறந்து
தென்றல் முகத்தில் வருட
இசை நெஞ்சைத் தொட
மெய் மறந்து நிற்கிறேன்
அடித்த கல்லைப் போல
கண்ணில் நீர் வழிய
கல்லும் கசிந்துருகும்
கொடியவனும் மாறுவான்
நோயும் குணமாகும்
மனத்தைச் சுண்டும்
இசையின் திறன் அதுவே.