இனிமையை ரசித்திடு - கவித்துளிகள்

வனிதையின் நினைவினில்
கனிவுடன் கலந்திட
இனிமையும் தருவது
தனிமையென் றறிந்திடு ...!!!
*******************************************
நுனிமர மலரதன்
நனிமிகு அழகினில்
பனித்துளி சிரித்திடும்
இனிமையை ரசித்திடு ...!!!
*********************************************
அழகிய அதிசயம்
பழகிட அதிரசம்
குழலிசை இதமென
மழலையும் சுகந்தரும் ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Feb-16, 11:00 am)
பார்வை : 80

மேலே