எனைக் காப்பாயோ அம்மா

அம்மா
தமிழின் உயிரெழுத்தும்
மெய்யெழுத்தும்
உயிர்மெய்யும்
இணைந்த தெய்வம் நீ
கோவில்கள் ஆயிரம் இருக்கலாம்
என் தெய்வம் நீ இல்லா எவ்விடமும் கோவிலில்லை எனக்கு
உனைத் தொழாத ஒவ்வொரு நாளும்
நான் செய்யும் பாவமாகும்
அது என்றென்றும் எனைப் பாவியாக்கும்
எனை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தாயே ஒரு சேயாக
நீ எந்தன் தாயாக
நான் நாளும் வணங்கும் என் தெய்வமே
உந்தன் அருளால் என்றென்றும் எனைக் காக்க வேண்டுகிறேன்..

எழுதியவர் : எழில் குமரன் (3-Feb-16, 8:02 pm)
பார்வை : 353

மேலே