வேறு நிலாக்கள் 14 - ஜின்னா

அடையாளம் தெரியாத அடையாளங்கள்
=====================================

எங்கோ ஒரு திசையிலிருந்து
சந்தோஷ கூக்குரலிடும்
சந்தம் கேட்டது - அது
ஏதோ ஒரு குழந்தை பிறந்து விட்டது
என்பதை உறுதி செய்தது...

எங்கோ ஒரு திசையிலிருந்து
அழுகையின் பேரிரைச்சல்
ஒப்பாரியின் உருவத்தில் கேட்டது - அது
ஏதோ ஒருவர் இறந்து விட்டார்
என்பதை உறுதி செய்தது...

இப்படியாக
எதிர் நோக்கிச் செல்லச் செல்ல
மனிதர்களின் பிறப்பு இறப்பு அடையாளங்களை
பார்க்க வேண்டி இருந்தது - ஆனால்
கடைசி வரை பார்க்கவே இல்லை
மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை...

======================================

பின் குறிப்பு:

இந்த தொடரில் இந்த கவிதைதான் எழுத வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்ட
தோழர் கவித்தா சபாபதிக்கு நன்றிகள்.

எழுதியவர் : ஜின்னா (4-Feb-16, 1:39 am)
பார்வை : 349

மேலே