வம்ச விளக்கு

நெல்விளைந்த புஞ்சை நிலம்வரண்டு நாளாக
புல்முளைத்தக் காடும் சருகாகி – கல்போன்று
காட்சிதர செய்த கடும்வரட்சி நீங்கிமழை
ஆட்சி வருவரை அன்றாடம் வான்பார்த்து
ஏங்கும் வயதான பாட்டி தனைநாளை
தாங்கும் அவள்பேரன் தானே விவசாயம்
காக்கின்ற வம்சம் விளக்கு.
*மெய்யன் நடராஜ்