மறக்க முடியாத பள்ளி , கல்லூரி வளாக நட்பு
எங்கேயோ மாடு மேய்த்த எனக்கு
இப்பெலாம்
எங்க எசமான் வீட்டு பையன்தான் சேக்காளி
அழுக்கு சட்ட போட்ட எனக்கு
பள்ளிகூடத்துல
பத்து பேரு கூட்டாளி
மணியடிச்ச மறுநிமிடம் மாந்தோப்புக்கு
மடை திறந்தால் போல் போக
மணிக்கணக்காய் காத்திருப்போம்
என்னோட அப்பா காய்ச்சலுக்கு
எல்லா பயலுங்களும்
என் வீட்டுக்கு வந்துட்டாங்க
அட பாவி முருகன் கிணற்றில்
விழுந்தப்ப ஓவென
அழுதது என் நண்பர் கூட்டம்
கலர் சட்ட போட்டுகிட்டு
கல்லூரி போனப்ப
கனவு நிறைய இருந்திச்சி
மணி கணக்கா யோசிச்சி
மணியோட காதல்
மனோவோட சேர்ந்திச்சி
நண்பன் வீட்டு நிகழ்ச்சிக்கு
நாலு நாள்
நண்பர்களோட ஓடிச்சி
ஓட்டம் ஒயிலாட்டம் ஒண்டியாட்டம்
எல்லாம்
ஒரு வருசம்போல முடிஞ்சி போச்சி
தோழி தோழன் வீடு பூட்டி கிடக்கு
தொல்லை
வேலை வெளிய போக விட மாட்டிக்குது
தேடல் இன்னும் நிறைய இருக்கு
தினம் தினம்
எங்கள் அன்பு நட்பாய் இருக்கு
எங்கிருந்தது வந்தது இந்த உறவு
எங்கபோய்
முடியுமோ எங்கள் நல்லுறவு