மருத்துவம் நலம் வாழ கட்டுரை
படித்த மருத்துவ ஆலோசனைக் கட்டுரை
பனியைத் தடுப்போம்; பிணியைத் தீர்ப்போம்
உடலை எப்படி எச்சரிக்கையாகப் பாதுகாப்பது?:
# பனிக்கால இரவு நேரங்களில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதை, இருசக்கர வாகனத்தில் சுற்றுவதை, கடைவீதியில் சுற்றுவதைத் தவிர்க்கலாம்.
# சூரிய அஸ்தமனமாகும் நேரத்திலேயே வீட்டின் ஜன்னல், கதவுகளை மூடவேண்டும்.
தூங்கும் அறைகளில் இரவில் குளிர்சாதன வசதியைத் தவிர்க்கலாம்; கார்களிலும் குளிர்சாதன வசதியைத் தவிர்க்கலாம்.
# காலை எழுந்தவுடன் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்கலாம்.
# உடலுக்கும், தலைக்கும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்கலாம்.
# குடிப்பதற்குக் காய்ச்சி வடிகட்டி, ஆற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம்.
# எளிதில் ஜீரணிக்கக்கூடிய சைவ உணவைச் சாப்பிடலாம்.
# எண்ணெய் பலகாரங்கள், அசைவ உணவு, கேக், குளிர்பானங்களை இந்தக் காலத்தில் தவிர்க்கலாம்.
# குளிர் பானங்கள், குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
# உடலை முழுவதும் மூடி இருக்கும்படி மேலாடைகளை அணிந்து கொள்ளலாம்.
# இரவு நேரங்களில், அதிகாலை நேரங்களில் ஸ்வெட்டர், மப்ளர், ஸ்கார்ப், கம்பளி போன்ற உடைகளைப் பயன்படுத்தலாம்.
# பேருந்து, கார்களில் பயணம் செய்யும் போது ஜன்னல் ஓரங்களில் அமர்வதைத் தவிர்க்கலாம்.
# சூரிய உதயத்துக்குப் பிறகு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.