ஒரே ஒரு இளவேனில்

~~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
வெறும் கைகளை உயர்த்தி
ஒன்றும் இல்லை என்று
விரித்துக் காட்டுவது போல
இலைகளைப் பறித்து சென்ற
மரங்களும் எதுவித எதிர்பார்ப்பும்
இல்லாமல்
காற்றுக்கு செவி சாய்த்து
கை அசைக்கிறது !
முளைத்தலின் நகர்தலை
வலியுணரும் தருணங்களில்
இழத்தலில் இறந்து போவதில்லை
என்று சாதனை படைத்த ஒரு மரத்தைப்
பார்த்து உணர்ந்து கொள்ள
புதையுண்ட விதைகள் எல்லாம்
எண்ணி இருக்குமோ...?
அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில்
பூத்துக் குலுங்கும் என்று கூறி
விட்டு விட்டு நீண்ட காலமாக
உறங்கிக் கொள்ளுமோ...?
இங்கும் காலம் தான் பதில்
சொல்லும் என்று காய் நகருமோ..?
ஒரே ஒரு நகர்வில்
எடுத்து வரும் இளவேனில்
இந்த கை விரிப்பை
கைது செய்து சிறையில் அடைத்தது. !
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (6-Feb-16, 5:18 am)
சேர்த்தது : தமிழ் உதயா
Tanglish : ore oru elavenil
பார்வை : 72

மேலே