முள்ளாகுமோ------

~~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
குற்றிய
முள்
நுழைந்து
உள் முறிந்து
வலி கொட்டி
உள் நெருக்கி
சீழ் கொழிந்து
கிடந்து அழுந்தி
புண்ணாக்கி
குருதி மாந்தி
சீழ் வடிந்து
ஒரு வகை
வாதையால் துடிக்க
இன்னும் ஒரு முள்
குத்திக் கிழித்து
கூர் நுனி தடவி எடுத்து
வாதை குறைத்து
வருடிக் கிடந்து
துடிக்கிறது. .....
இரண்டும் முள் தானே
இது இரண்டும் ஒன்றாகுமோ. ..?
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (6-Feb-16, 5:15 am)
சேர்த்தது : தமிழ் உதயா
பார்வை : 57

மேலே