பாறைகளாய் கனவுகள்

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நீண்டதொரு
நம்பிக்கையோடு
வெளி வருகின்றேன். ..
பூமி பறந்து விடாமல்
பாரம் வைத்தது போல
மரங்களும் மலைகளும்
மனிதனின் குடில்களும்
நிலைத்து நிற்கின்றன ....
காற்றின் அடிப்பால்
ஒற்றைக் காகிதக் கட்டு
கட்டுப்படுத்த முடியாமல்
பட படத்து துடிப்பது போல
என்னை அழுத்தும்
ஒரு வேதனை. ...
சலசலத்து ஓடி வந்த
ஆற்று நீர் போல
நிறம் கூட்டி
அழுக்குப் பட்ட இதயம்
அன்று தான் உணர்ந்தது
மனிதனை
அழுத்திக் கொண்டிருக்கும்
பாரம் எதுவென்று !
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (6-Feb-16, 5:04 am)
சேர்த்தது : தமிழ் உதயா
பார்வை : 73

மேலே