காற்றோடு கவிதை
இரவு நதியில்
கனவுப் படகில்
இடைவிடாது
மிதக்கும்
நினைவுகளைச்
சேகரித்து
எப்போதும்
கரையிறங்கும்
துறையில்
தூறிச் சென்ற
காலை மழையின்
பின் ஈரச்
சிறகுலர்த்தும்
பட்சிகளின்
உதிர்ந்ததொரு
இறகெடுத்து
நீ நடந்துவரும்
ஒற்றையடிப்
பாதையின்
இருமருங்கும்
படர்ந்திருக்கும்
புல்நுனி மேல்
எழுதி
வைப்பேன்
நேசத்துடன்
நித்தம் ஒரு
கவிதை
காலை
வெய்யிலில்
காயமுன்
அதைப்
படித்து விடு
காற்றோடு
பதில் கூறு ..